அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள்: சீனா கடும் எதிர்ப்பு!
சீன இராணுவத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி, அலிபாபா (Alibaba), பைடு (Baidu), பி.வய்.டி (BYD) மற்றும் நியோ (NIO) உள்ளிட்ட முன்னனி சீன நிறுவனங்களை அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் தனது கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது என சீன அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக விதிகளை மீறும் இத்தீர்மானம், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் புவிசார் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இத்தடையானது உலகளாவிய முதலீட்டுத் துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

