ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர்கள் விடுவிப்பு!

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: ஈரானின் முடக்கப்பட்ட 24 பில்லியன் டொலர்கள் விடுவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தத்திற்கான சாத்தியமான உடன்படிக்கை ஒன்று எட்டப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச ரீதியில் முடக்கப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் விடுவிக்கப்படவுள்ளதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதனை ஈரானின் ‘பார்ஸ்’ (Fars) செய்திச் சேவை உத்தியோகபூர்வமாக மேற்கோள் காட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் லெபனானும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin