கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ‘USS Canberra’

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன Independence-variant Littoral Combat Ship (LCS) வகையைச் சேர்ந்த ‘USS Canberra’ போர்க்கப்பல், எரிபொருள் நிரப்புதல் மற்றும் அத்தியாவசிய தளபாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான குறுகியகால நிறுத்தமாக இன்று (12) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கப்பலின் வருகையையடுத்து, கடற்படை மரபுகளுக்கு அமைவாக இலங்கைத் தரப்பினர் அமெரிக்கக் கடற்படையினரை வரவேற்றதுடன், கப்பலின் கட்டளை அதிகாரி, மாலுமிகள் மற்றும் குழுவினருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த விஜயம், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin