உயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப கோரி எதிர்க்கட்சி கோரிக்கை

உயர் நீதிமன்ற நீதிபதி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப கோரி எதிர்க்கட்சி கோரிக்கை

உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலவி வரும் நீதிபதி பதவிகளுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட விசேட கடிதமொன்று இன்று (12) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் மூலம், அரசியலமைப்பு சபையின் தலைவராக உள்ள ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்று, உயர் நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடங்களை தாமதமின்றி நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுமக்களின் நீதி அணுகலை உறுதிப்படுத்தும் நோக்கில், நீதிபதி நியமனங்களில் ஏற்பட்டுள்ள தாமதம் விரைவாக தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin