அரசுக்கு ரூ.51 இலட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

அரசுக்கு ரூ.51 இலட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு: இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் கைது!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகமான லலித் பியூம் பெரேரா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அம்பாறை, சாமபுர பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடங்களை குத்தகைக்கு பெற்றுக்கொடுத்த விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

மூன்றாம் தரப்பினருக்கு மன்றத்தின் நிதியிலிருந்து 38 இலட்சம் ரூபாய் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டதாகவும், கட்டிடப் புனரமைப்புக்காக முறையான அனுமதியின்றி 13 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்மூலம் அரசாங்கத்திற்கு 51 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin