நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

 

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

 

இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்த நீதிபதிகள் குழாம், அன்றைய தினம் நாமல் ராஜபக்சவைச் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin