யாழ்ப்பாணத்தை உலுக்கிய அதிர்ச்சி – செம்மணி கூட்டுப் புதைகுழியில் மீட்கப்பட்ட குழந்தைகளின் பால் புட்டிகளும், பிஞ்சு உடல்களும்!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பட்டி கூட்டுப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கிப் போடும் மிகக் கொடூரமான உண்மைகள் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கியுள்ளன!

🛑 20-வது நாளில் வெளிவந்த கொடூரம்!
​மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 20-வது நாளான இன்று, மேலும் 9 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் மிகக் கொடுமை என்னவென்றால், மீட்கப்பட்ட 9 எச்சங்களில் 8 எலும்புக்கூடுகள் பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் என நம்பப்படுகிறது!

🎒 விளையாட்டுப் பொம்மைகளும் பள்ளிப் பைகளும்!
​வெறும் எலும்புக்கூடுகள் மட்டுமல்லாமல், அந்தப் பிஞ்சுகள் பயன்படுத்திய..
​குழந்தை பால் புட்டிகள்

விளையாட்டுப் பொம்மைகள் & பதுமைகள்

🔴​சிறிய காலணிகள் 👟

​பள்ளிப் பைகள் (School Bags) 🎒

போன்றவை மண்ணுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன.

தரைக்குக் கீழே வெறும் ஒன்றரை முதல் இரண்டு அடி ஆழத்திலேயே இந்த எச்சங்கள் அவசர அவசரமாகப் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் குழந்தைகளாக இருந்திருக்கலாம் என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

​📈 இதுவரை 327 உடலங்கள் அடையாளம்!

இலங்கையின் இரண்டாவது பெரிய கூட்டுப் புதைகுழியாகக் கருதப்படும் இந்தச் செம்மணித் தளத்தில், இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது! இவற்றில் 311 உடலங்கள் தற்போது முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன.

1998 முதல் நீளும் நீதிக்கான போராட்டம்!
​1996-ல் தமிழ்ப் பள்ளி மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1998 நீதிமன்ற விசாரணையின் போதுதான், “செம்மணியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன” என்ற அதிர்ச்சித் தகவலை முதன்முதலில் வெளியிட்டார்!

💰நிதி ஒதுக்கீடும் தற்போதைய கள நிலவரமும்..

​ஏழு மாத முடக்கத்திற்குப் பிறகு, ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 27 முதல் அகழ்வுகள் தீவிரமடைந்துள்ளன.

யாழ்ப்பாண நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில், பிரபல தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண நீதித்துறை மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!

⌛​மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன! அந்த ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்குமா?

Recommended For You

About the Author: admin