யாழ் சிறைச்சாலை வளாகத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்திற்கு மேல் அனுமதியின்றி ட்ரோன் (Drone) பறக்கவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் பறக்கவிடப்பட்டதன் நோக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், ட்ரோன் மற்றும் அதில் பதிவான காட்சிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin