“பல பெண்களுடன் தொடர்பு.. அதான் வெட்டி வீசினோம்!”. சென்னை பெரம்பூர் கொலையில் வெளியான திடுக்கிடும் பின்னணி.. 2-வது கணவனைத் தீர்த்துக் கட்டிய பயங்கரம்..!!!
பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை படிக்கட்டில் கேட்பாரற்று கிடந்த நீல நிற சூட்கேஸில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், கொலையான நபரின் அடையாளம் காணப்பட்டு அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு ஒரு சூட்கேஸ் மர்மமான முறையில் கிடப்பதைக் கண்டு திறந்து பார்த்துள்ளனர்;
அப்போது அதற்குள் தலை இல்லாமல் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டேரி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், கொலையான நபர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த அமீர் அலி என்பது முதற்கட்டமாகத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் அமீர் அலியின் மனைவி ரஹிமா மற்றும் அவரது வாலிப நண்பர் அஸ்ராம் ஆகியோர் பிடிபட்டனர்; அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலையான அமீர் அலி தனது 2-வது கணவர் என்றும், அவருக்குப் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் ரஹிமா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்படி, அமீர் அலி மயக்க நிலையில் இருந்த சமயம் பார்த்துத் தனது நண்பர் அஸ்ராமின் உதவியோடு அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியதாக அவர் தற்பொழுது பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். பெரம்பூர் ரயில் நிலையப் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரக் கொலை சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சென்னை மக்களையும் உலுக்கி எடுத்து சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

