பெட்ரோல் பங்க் ஊழியர் முதுகில் கத்தி குத்து. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ..!

பெட்ரோல் பங்க் ஊழியர் முதுகில் கத்தி குத்து. பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ..!

Maharashtra Dist – வெவ்வேறு பகுதிகளில் பெட்ரோல் பங்க் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவமும், மனைவியின் கள்ளக்காதலன் தொண்டை அறுத்துக் கொல்லப்பட்ட கொடூரமும் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ரவி பாங்டே என்ற ஊழியர் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, இரண்டு இருசக்கர வாகனங்களில் 6 இளைஞர்கள் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்தது.

 

அப்போது, ஊழியர் ரவி பாங்டேவிற்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே திடீரென ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு அடுத்த சில நிமிடங்களிலேயே வன்முறையாக மாறியது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்தக் கும்பலில் இருந்த ஒரு இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஊழியர் ரவியின் முதுகில் கொடூரமான முறையில் குத்தினான். கத்திக்குத்தப்பட்ட ரவி வலியால் துடித்தார். உடனே அந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து வண்டிகளில் தப்பி ஓடியது. இந்த ஒட்டுமொத்த கொடூரக் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

படுகாயமடைந்த ரவி உடனடியாக நாக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.

 

இதற்கிடையே, மும்பையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர், தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் நபரைத் தந்திரமாகத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவருக்குத் தாராளமாக மது கொடுத்து உபசரித்துள்ளார். அந்த நபர் போதையில் நிலைகுலைந்ததும், தனது மனைவியின் கண் எதிரே அந்த நபரின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆரே போலீசார், குற்றவாளியை அடுத்த 3 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவங்கள் மஹாராஷ்ட்டிராவில் அதிர்ச்சியாயை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin