இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2026) தொடர்பான அரச பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விருந்தினராக ஒரு குரங்கு தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அரச ஊழியர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, காட்டு குரங்கு ஒன்று அமைதியாக அரங்குக்குள் நுழைந்தது.
அதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த குரங்கு எந்தவித பரபரப்பும் ஏற்படுத்தாமல், ஒரு பெண் பங்கேற்பாளர் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டது.
சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்த குரங்கை பார்த்து அரங்கில் இருந்தவர்கள் சிரிப்பையும் ஆச்சரியத்தையும் மறைக்க முடியவில்லை. சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
சிலர் இந்த குரங்காரை, பயிற்சிக்கு உங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா என நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்

