பாரிஸ்: பெண் காவல் அதிகாரி மீது கத்தியால் தாக்குதல்; தாக்குதல் நடத்திய பெண் சுட்டு வீழ்த்தப்பட்டார்!

பாரிஸ்: பெண் காவல் அதிகாரி மீது கத்தியால் தாக்குதல்; தாக்குதல் நடத்திய பெண் சுட்டு வீழ்த்தப்பட்டார்!

பாரிஸ் நகரின் 12-ஆவது வட்டாரத்தில் (Arrondissement), பெண் காவல் அதிகாரி ஒருவரைக் கத்தியால் தாக்கிய பெண் ஒருவர் காவல்துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (ஜூலை 1, புதன்கிழமை) பிற்பகல், வாட்டினீஸ் தெருவில் (Rue de Wattignies) அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் மனநலம் குன்றியவரைப் போல நடந்துகொள்வதாகக் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.

பாரிஸ் அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலகம் (Parquet de Paris) வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி, நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணை நெருங்கியபோது, அவர் திடீரென ஒரு கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு பெண் காவல் அதிகாரி ஒருவரை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளார். இந்தத் திடீர் தாக்குதலில் அந்தப் பெண் அதிகாரியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், சக அதிகாரியின் உயிரைக் காக்கவும் மற்ற காவல் அதிகாரிகள் உடனடியாகப் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘மனநலம் குன்றியவரை போல நடந்து கொண்ட ஒரு பெண்ணை தற்காப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினரால் துப்பாக்கி பிரயோகம் செய்து உயிழக்க வைக்காமல் வேறு வழி முறைகளில் ஏன் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்த்திருக்க முடியாதா ? ‘,என்ற கேள்வி பல்வேறு தரப்புகளிருந்தும் எழுப்பப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin