மே 1 விடுமுறைத் தொடர்: பிரான்சில் சாலை நெரிசல் எச்சரிக்கை

மே 1 விடுமுறைத் தொடர்: பிரான்சில் சாலை நெரிசல் எச்சரிக்கை; எப்போது, எந்தப் பாதைகளைத் தவிர்க்க வேண்டும்?

பாரிஸ் 29.04.2026 SCI

பிரான்சில் ‘மே 1’ (தொழிலாளர் தினம்) விடுமுறையுடன் சேர்ந்து வார இறுதி நாட்களும் வருவதால், பலர் நீண்ட விடுமுறைப் பயணங்களைத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ‘C’ மண்டலப் பள்ளிகளின் (zone C) விடுமுறை முடிவடைவதும், அண்டை நாடான நெதர்லாந்தில் விடுமுறை முடிவடைவதும் சேர்ந்து இந்த வார இறுதியில் பிரான்ஸ் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவுள்ளன.

 

இதைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் போக்குவரத்து முன்னறிவிப்பு அமைப்பான ‘Bison Futéவெளியிட்டுள்ள விரிவான போக்குவரத்து வழிகாட்டுதல்கள் இதோ:

 

வியாழக்கிழமை (ஏப்ரல் 30): மோசமான நெரிசல் நாள்

 

ஆச்சரியப்படும் விதமாக, வெள்ளிக்கிழமையை விட வியாழக்கிழமையே (ஏப்ரல் 30) சாலைகளில் அதிக நெரிசல் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் ‘ஓரேஞ்சு’ (Orange) நிற எச்சரிக்கையும், குறிப்பாக பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள ‘இல்-து-பிரான்ஸ்’ (Île-de-France) பகுதிக்கு அதிதீவிர ‘சிவப்பு’ (Red) நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மதியத்திலிருந்து இரவு வரை முக்கியச் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளது.

 

புறப்படுபவர்கள் தவிர்க்க வேண்டிய நேரங்கள் மற்றும் சாலைகள்:

 

இல்-து-பிரான்ஸ் (Île-de-France): காலை 11 மணிக்கு முன்போ அல்லது இரவு 23 மணிக்கு (11 PM) பிறகோ இப்பகுதியைக் கடப்பது நல்லது.

 

A1 நெடுஞ்சாலை (பாரிஸ் – லில்): பகல் 12 மணி முதல் மாலை 17 மணி (5 PM) வரை.

 

A10 நெடுஞ்சாலை (பாய்ட்டியர்ஸ் – போர்டோ): மாலை 16 மணி (4 PM) முதல் 18 மணி (6 PM) வரை.

 

A7 நெடுஞ்சாலை (லியோன் – ஓரேஞ்ச்): மாலை 15 மணி (3 PM) முதல் இரவு 22 மணி (10 PM) வரை; (ஆரஞ்ச் – மார்செய்லி): மாலை 16 மணி முதல் 20 மணி வரை.

 

N12 (ரென்- பிரெஸ்ட்) & N165 (நாந்த் – குயிம்பர்): மாலை 17 மணி (5 PM) முதல் 20 மணி (8 PM) வரை.

 

ஊர் திரும்புபவர்கள் தவிர்க்க வேண்டிய நேரங்கள் மற்றும் சாலைகள்:

 

இல்-து-பிரான்ஸ்: மதியம் 14 மணி (2 PM) முன்போ அல்லது இரவு 20 மணிக்கு (8 PM) பிறகோ கடக்கவும்.

 

A1 நெடுஞ்சாலை (லில் – பாரிஸ்): மாலை 15 மணி (3 PM) முதல் 19 மணி (7 PM) வரை.

 

A10 நெடுஞ்சாலை (போர்டோ – பாய்ட்டியர்ஸ்): மாலை 17 மணி முதல் 21 மணி (9 PM) வரை.

 

A31 (லக்ஸம்பர்க் – நான்சி) & A51 (கேப் – மார்செய்): மாலை 15 மணி முதல் இரவு 20 மணி வரை.

 

வெள்ளிக்கிழமை (மே 1) மற்றும் சனிக்கிழமை (மே 2): ஓரளவு நிம்மதி

மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ் முழுவதும் சாலைகளில் நெரிசல் குறைந்து ‘பச்சை’ (Green) நிறக் குறியீட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனிக்கிழமை அன்று, ‘இல்-து-பிரான்ஸ்’ பகுதிக்குத் திரும்புபவர்களுக்கு மட்டும் நெரிசல் (ஓரேஞ்சு) இருக்கலாம். எனவே, பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மதியம் 14 மணிக்கு முன்போ அல்லது இரவு 22 மணிக்கு (10 PM) பிறகோ பயணத்தைத் திட்டமிடுவது நல்லது.

 

ஞாயிற்றுக்கிழமை (மே 3): ஊர் திரும்புபவர்களுக்கான எச்சரிக்கை

விடுமுறை முடிந்து ஊர் திரும்புபவர்களால் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்திலேயே சாலைகளில் நெரிசல் தொடங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, பிரான்சின் வடமேற்குப் பகுதிகளுக்கு ‘ஒரேஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ஞாயிறு அன்று தவிர்க்க வேண்டிய நேரங்கள் மற்றும் சாலைகள்:

 

இல்-து-பிரான்ஸ்: காலை 11 மணிக்கு முன்போ அல்லது நள்ளிரவு 23 மணிக்கு (11 PM) பிறகோ நுழைவது பாதுகாப்பானது.

 

A10 நெடுஞ்சாலை (டூர்ஸ் – பாரிஸ்): காலை 11 மணி முதல் இரவு 23 மணி வரை தொடர்ந்து நெரிசல் இருக்கும்.

 

A13 (கேன் – பாரிஸ்): காலை 11 மணி முதல் இரவு 20 மணி வரை.

 

A1 நெடுஞ்சாலை (லில் – பாரிஸ்): மாலை 15 மணி (3 PM) முதல் இரவு 20 மணி வரை.

 

A11 நெடுஞ்சாலை (லெ மான்ஸ் – பாரிஸ்): காலை 11 மணி முதல் மாலை 18 மணி (6 PM) வரை.

 

உங்கள் பயண நேரங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள்!

Recommended For You

About the Author: admin