இறைவன் கொடுக்க நினைத்தால் இவ்வாறு தான் கொடுப்பான்…

இறைவன் கொடுக்க நினைத்தால் இவ்வாறு தான் கொடுப்பான்…

தென் கொரியாவில் போர் விமானம் விபத்துக்குள்ளானபோது, கடலில் தத்தளித்த விமானிகளைத் தனது உயிரைப் பொருட்படுத்தாது மீட்ட ருவான் என்ற இலங்கை இளைஞருக்கு, அந்நாட்டு அரசாங்கம் சட்டப்பூர்வ வதிவிட அனுமதியை வழங்கி கௌரவித்துள்ளது.

2022 ஆகஸ்டில் ஜேபுடோ கடற்பகுதியில் F-4 Phantom விமானம் விபத்துக்குள்ளானதை நேரில் பார்த்த ருவான், தனது சக ஊழியர்களுடன் படகில் சென்று விமானிகளைப் பாதுகாப்பாக மீட்டார்.

 

விசா காலம் முடிவடைந்ததால் நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த ருவானை, “தேசத்திற்குப் பங்காற்றியவர்” என தென் கொரிய விமானப்படை அங்கீகரித்தது. இதன் அடிப்படையில், அவருக்கு விதிக்கப்பட வேண்டிய அனைத்து அபராதங்களையும் தள்ளுபடி செய்த நீதி அமைச்சு, கடந்த ஏப்ரல் 10-ஆம் திகதி அவருக்குப் புதிய வேலை விசாவை வழங்கி சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளது.

Recommended For You

About the Author: admin