ஈரானில் பெண் செயற்பாட்டாளர் உட்பட நால்வருக்கு மரண தண்டனை

ஈரானில் பெண் செயற்பாட்டாளர் உட்பட நால்வருக்கு மரண தண்டனை: சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்!

ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati) உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச ரீதியாகக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதற்காகவே இந்த “உறையவைக்கும் தீர்ப்பு” வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

 

பெண் செயற்பாட்டாளர் பிட்டா ஹெம்மாட்டி, அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஈரானின் தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தமை மற்றும் அதில் பங்கேற்றமை போன்ற குற்றச்சாட்டுக்கள் அவா்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. .

 

ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் இந்தத் தீர்ப்பை வன்மையாகக் கண்டித்துள்ளன. இது அடிப்படை மனித உரிமை மீறல் என அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஈரான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதால், ஈரானுக்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin