இன்று (17) அதிகாலை கத்தார் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புப் படையினர் அவசரகாலத் திட்டங்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கத்தாரின் வான் பாதுகாப்புப் பிரிவினர் ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதிலும், மேலிருந்து விழுந்த ஏவுகணைச் சிதறல்கள் காரணமாக சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ தகவல் மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுமாறும் கத்தார் உள்துறை அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

