அமெரிக்க ராணுவத்தின் முதுகெலும்பாகவும், நவீன போர் விமானங்களின் அடையாளமாகவும் திகழ்வது UH-60 Black Hawk.
உலகின் எந்தவொரு கடினமான நிலப்பரப்பிலும் நுழைந்து தாக்குதல் நடத்தவும், வீரர்களை மீட்கவும் இதைப் போல மற்றொரு ஹெலிகாப்டர் இல்லை என்றே கூறலாம்.
1993-ம் ஆண்டு, சோமாலியாவின் தலைநகர் Mogadishuவில் நடந்த அந்த நிகழ்வு அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத மரண அடி என்றே கூறவேண்டும்.
அமெரிக்காவின் Elites ‘Delta forces ‘ மற்றும் ‘Rangers’ வீரர்கள், ஒரு சர்வாதிகாரியின் தளபதிகளைப் பிடிக்க ஒரு மின்னல் வேகத் திட்டத்தைத் தீட்டினர்.
அன்று வானில் வட்டமிட்ட Black Hawk ஹெலிகாப்டர்கள் வீரர்களைக் கயிறு மூலம் கீழே இறக்கின. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, தரையிலிருந்து ஏவப்பட்ட ஒரு RPG (Rocket-Propelled Grenade) ஏவுகணை, ‘Super 6-1’ என்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டரின் வால் பகுதியைத் தாக்கியது.
தட்டையான இறக்கைகள் கொண்ட அந்தப் பறவை, கட்டுப்பாட்டை இழந்து சுழன்று தரையில் விழுந்தது.
அதைத் தொடர்ந்து மற்றொரு ஹெலிகாப்டரும் சுடப்பட்டது. ஒரு மணி நேரப் போர், 15 மணி நேரப் பயங்கர மோதலாக மாறியது.
ஒரு சர்வாதிகாரியை சிறைபிடிக்கச் சென்ற அமெரிக்க இராணுவத்தின் அந்த இராணுவ நடவடிக்கை தனது வீரர்களைக் காப்பாற்றினாலே போதும் என்ற மீட்புப் போராட்டமாக மாறியது.
black hawk ஹெலிகாப்டரின் வலிமையின் பலவீனமும் அதே சமயம் போர்க்களத்தின் அபாயத்தையும் உலகுக்கு உணர்த்தியது.
ஏன் உலக நாடுகள் அனைத்தும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரை வாங்கத் துடிக்கின்றன?
இதோ அதன் சிறப்பம்சங்கள்:
அபார வேகம் மற்றும் சுறுசுறுப்பும் வியக்கத்தக்கவை, இது மணிக்கு சுமார் 280 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது. எவ்வளவு செங்குத்தான மலைகளிலும், அடர்ந்த காடுகளிலும் நுணுக்கமாகச் செயல்படும்.
இதன் பிளேடுகள் (Blades) 23mm பீரங்கி குண்டுகளைத் தாங்கினாலும் உடையாத வகையில் டைட்டானியம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது வெறும் போர் விமானம் மட்டுமல்ல; ஒரே நேரத்தில் 11 ஆயுதம் ஏந்திய வீரர்களைச் சுமந்து செல்லும், ஆம்புலன்ஸாக மாறும், அல்லது 4,000 கிலோ எடையுள்ள பீரங்கிகளைத் தூக்கிச் செல்லும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள M240 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் எதிரிகளை நிலைகுலையச் செய்யும்.
அதே பெருமைக்குரிய Black hawk ஹெலிகாப்டர் ஈரானின் எல்லைப் பகுதியில் மிகத் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த அந்த மாலை நேரம்.
நவீன ரேடார்கள், ஏவுகணைகள் என எதற்கும் அஞ்சாத அந்த இரும்புப் பறவை, ஒரு எளிய மனிதனால் வீழ்த்தப்படும் என்று யாரும் ஊகித்திருக்க முடியாது.
மலைப்பகுதியை ஒட்டியிருந்த ஒரு சிறிய கிராமத்தின் பழைய வீட்டின் ஜன்னல் ஓரம் அந்த முதியவர் அமர்ந்திருந்தார். தனது அமைதியான வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் காதை பிளக்கும் சத்தத்துடன் அந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மிக அருகில் வந்ததைக் கண்டார். அது தரையிலிருந்து மிகக் குறைந்த உயரத்தில், அதாவது மரங்களின் உச்சிக்குச் சற்று மேலாகப் பறந்து கொண்டிருந்தது.
ஹெலிகாப்டரின் உடல் பகுதி குண்டு துளைக்காத கவசத்தால் ஆனது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரது அனுபவம் வாய்ந்த கண்கள் அந்தத் தடித்த கண்ணாடியின் பின்னால் இருந்த விமானியை (Pilot) நோக்கியது.
ஹெலிகாப்டர் திரும்பும்போது, அதன் பக்கவாட்டுப் பகுதி முதியவரின் ஜன்னலுக்கு நேராக வந்தது. ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அந்த முதியவர் தனது Rifle மூலம் ஒரு குண்டைச் சுட்டார்.
Rifleல் இருந்து வெளியேறிய அந்தச் சிறிய ரவை (rounds), விமானியின் தலைப்பகுதியைத் தாக்கியது. விமானி நிலைதடுமாற, கட்டுப்பாட்டை இழந்த black hawk , ஒரு சில நொடிகளில் தரையில் மோதி சிதறியது.
இந்தச் செய்தி பரவியதும், உலக நாடுகளின் ராணுவப் பார்வையே மாறியது. கோடிக்கணக்கான டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஒரு ‘சூப்பர் ஹெலிகாப்டர்’, வெறும் ஒரு வேட்டைத் துப்பாக்கியால் வீழ்த்தப்பட்டது என்பது அமெரிக்காவின் ராணுவத் தொழில் நுட்பக் கட்டமைப்பையே (Military Industrial Complex) உலுக்கியது.
“எல்லா நவீனத் தொழில்நுட்பங்களும் ஒரு சாதாரண மனிதனின் துணிச்சலுக்கு முன்னால் ஒன்றுமில்லை” என்று உலக நாடுகள் பேசத் தொடங்கின.
Black hawk ஹெலிகாப்டர்களை வாங்க வரிசையில் நின்ற நாடுகள், அதன் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டு பின்வாங்கத் தொடங்கின.
இது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பைப் பெருமளவில் பாதித்தது மட்டுமல்லாமல், ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு இத்தகைய எளிய சம்பவங்களே அடித்தளமாக அமையும் என்பதையும் உணர்த்தியது.
இந்த போரில் ஈரான் அமெரிக்காவிற்கு அவமானங்களிற்கு மேல் அவமானமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஈரானின் துணிவிற்கு முன்னால் Black hawk -ன் தொழில்நுட்பம் எல்லாம் சிறு தூசு.

