வெறும் 36 நாட்களில் அமெரிக்காவின் 42 பில்லியன் டாலர் வரிப்பணம் சாம்பல்!

ஈரான் மீதான தாக்குதல்: வெறும் 36 நாட்களில் அமெரிக்காவின் 42 பில்லியன் டாலர் வரிப்பணம் சாம்பல்!

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை $42 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடங்கி 36 நாட்கள் கடந்துள்ள நிலையில், பென்டகன் தரவுகளின் அடிப்படையில் ‘ஈரான் போர்ச் செலவு கண்காணிப்பகம்’ (Iran War Cost Tracker) இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.

 

மோதல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் கப்பல்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் மற்றும் இதர செயல்பாட்டுச் செலவுகள் இதில் அடங்கும்.

 

இந்த நடவடிக்கையின் முதல் 6 நாட்களில் மட்டும் $11.3 பில்லியன் டாலர்கள் செலவானது.

 

அதன் பிறகு, தினசரி செலவு சுமார் $1 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

Recommended For You

About the Author: admin