சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் மணப்பெண் தட்டுப்பாடு!

சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் மணப்பெண் தட்டுப்பாடு!

திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான ஆண்கள்

சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு சுமார் 6.5 மில்லியன் திருமணங்களே நடந்தன.

பத்தாண்டுக்கு முன்போடு ஒப்பிடுகையில் அது பாதி அளவாகும்.

சீனா நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த ஒரே குழந்தை கொள்கையும், ஆண் பிள்ளைகளே வேண்டும் என்று சீனப் பெற்றோர் விரும்பியதும் இப்போது கல்யாணத்துக்குப் பெண் இல்லாத நிலையை உருவாக்கிவிட்டது.

சீனாவில் பெண்களைவிட 30 மில்லியன் அதிகமாக ஆண்கள் இருக்கின்றனர். CNAவின் Chinese Matchmakers என்ற இரண்டு பகுதித் தொடர் இளையர்கள் கல்யாணத் தரகர்களை நாடுவதைக் காட்டுகிறது.

வேலையில் அதிக நேரம் போய்விடுவதால் சீனாவில் இளையர்களுக்குக் காதலிக்க நேரமில்லை.

அதனால் பலரும் தங்கள் ஜோடியைச் சந்திக்க இணையத்தையும் துணை தேடி தரும் சேவைகளையும் நாடுகின்றனர்.

இருந்தும் பெண் கிடைப்பது எளிதல்ல. பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன. அதிகமான சம்பளம், சொந்த கார், முழுமையாகப் பணம் செலுத்தப்பட்ட வீடு…

அவை அனைத்தையும் பூர்த்தி செய்தாலும் மனம் ஒத்துவரவில்லை என்றால் மணமுடிப்பது சிரமம் என்கின்றனர் கல்யாணத் தரகர்கள்.

Recommended For You

About the Author: admin