உயிரை மாய்க்கும் முன் நடிகை சுபாசினியின் கடைசிப் பதிவு
யாரும் எதிர்பார்க்காத இலங்கை நடிகை ஷாஸ்வி பாலா என்கிற சுபாஷினியின் முடிவு.
சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கயல் சீரியல் நடிகை சுபாஷினி மரணம் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
அதில் மிகவும் மனதை பதற வைக்கும் விஷயம் என்ன தெரியுமா? அவர் உயிரிழப்பதற்கு முன்பு போட்டிருந்த கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு தான்.
கலங்க வைக்கும் பதிவு Life lately… என்று ஒரு சாதாரண கேப்ஷனுடன் சுபாஷினி பகிர்ந்த அந்த வீடியோ – அதைப் பார்த்தால் யாருக்கும் இது ஒரு சோக முடிவிற்கு முன்னோட்டம் என்று கூட தோன்றாது.
அந்த பதிவில் ஹேப்பி மியூசிக் பேக்ரவுண்டில் ஓட, சுபாஷினி, ஜாலியாக மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் வாக்கிங் போற மாதிரி இருக்கிறது. ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கென்யாவில் அவர் இப்படி ஜாலியாக சுற்றி திரிந்திருக்கிறார்.இவ்வளவு ஜாலியா போஸ்ட் போட்டவரா இப்படி செஞ்சிருப்பாங்க?ன்னு ரசிகர்கள் இப்போ வரைக்கும் நம்ப முடியாம தவிக்கிறாங்க.
வெளிநாட்டில், இயற்கை அழகை ரசித்தபடி, சிரித்துக் கொண்டே சுற்றி பார்க்கும் காட்சிகள்… ஒரு ரெஸ்டாரண்டில் அமைதியாக உணவு சாப்பிடும் தருணங்கள்… எல்லாமே ஒரு சந்தோஷமான வாழ்க்கையை காட்டுவது போல இருந்தது.ஆனால் அந்த வீடியோ வெளியான ஒரு நாள் கூட ஆகாமல், அவர் மரணமடைந்த செய்தி வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
36 வயதான சுபாஷினி ஸ்ரீலங்கா நாட்டை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் தன்னுடைய கணவர் உடன் வசித்து வந்த நிலையில் ஷூட்டிங் காரணமாக போரூரில் தங்கி வந்திருக்கிறார். கயல் சீரியலில் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கோல் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர் த**ற்**கொ**லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்து விடுகிறார்கள்.
அந்த வரிசையில் சுபாஷினியும் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்தான்.
சுபாஷினி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர். தினமும் ஏதாவது ஒரு பதிவு – புகைப்படம், வீடியோ, ரீல்ஸ் என ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். குறிப்பாக அவருடைய கணவருடன் எடுத்த வீடியோக்கள், ஜாலியான தருணங்கள், சிரிப்புகள்… இவை எல்லாம் அவருடைய பக்கத்தில் நிறைய இருந்தது.ஒரு பதிவில் அவர், நான் என் கணவரை கண்களாலே கைது செய்த தருணம் என்று ரொமான்டிக் கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். அந்த அளவிற்கு தனது உறவை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டியவர்.அதுமட்டுமில்லை, குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள், நண்பர்கள், சீரியல் கூட்டணி நடிகர்களுடன் எடுத்த ஸ்னாப்கள் – இவை அனைத்தும் அவர் ஒரு சமூகமாக இணைந்த மனிதர் என்பதையே காட்டியது.இப்படி வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தவர், ஏன் திடீரென இப்படிப் பட்ட முடிவை எடுத்தார்? இதுதான் இப்போது அனைவரையும் துரத்திக் கொண்டிருக்கும் கேள்வி.
நேற்று வரை சிரித்த முகம்… இன்று இல்லையே என்ற உணர்வு தான் ரசிகர்களை அதிகமாக பாதித்துள்ளது.
எம்மைச் சுற்றியுள்ளவர்கள் அனைவரும் மகிழ்வாக இருக்கிறார்கள் என்றோ வசதியாக இருக்கிறார்கள் என்றோ எண்ணிக் கொண்டு கடந்து விடுகிறோம்.
அவர்கள் தங்கள் உயிரை தாமே எடுத்துக் கொள்ளும் அளவிற்கு துணிவானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் அந்த பிரச்சினைகளை சமாளிக்க முடியாதவர்களாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்..


