ரஷ்யாவின் இராணுவக் கட்டமைப்புகளைச் சிதறடித்த உக்ரைனின் டிரோன் தாக்குதல்: ஒரு விசேட பார்வை!

உக்ரைன் இராணுவம் மேற்கொண்டு வரும் அதிநவீன ‘டிரோன்’ (Drone) தாக்குதல்கள், ரஷ்யாவின் போர் வியூகங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, உக்ரைனின் சிறப்பு நடவடிக்கைப் படைகள் ஒருங்கிணைத்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவின் நான்கு முக்கிய பிராந்தியங்களில் உள்ள இராணுவ இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டொனெட்ஸ்க், லுகான்ஸ்க், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த பாரிய தாக்குதலில் முக்கிய இலக்குகள் அழிக்கப்பட்டு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெடிமருந்து கிடங்குகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் அழிக்கப்பட்டு அல்லது செதமாக்கப்பட்டதனால், ரஷ்யப் படைகளுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் இதனால் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவின் புகழ்பெற்ற ‘TOR-M1/M2’ வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மின்னணு போர் கருவிகள் (Electronic Warfare gear) செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. ‘Geran’ மற்றும் ‘Shahid’ ரக டிரோன்களை ஏவும் தளங்களும் தரைமட்டமாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றுடன் கிரிமியாவின் செவாஸ்டோபோல் பகுதியில் உள்ள கடல்சார் டிரோன் தளம் மற்றும் ‘Valdai’ ரேடார் அமைப்பு ஆகியவை துல்லியமாகத் தாக்கப்பட்டன.

உக்ரைன் படைகள் தெற்குப் பகுதியில் மேற்கொண்டு வரும் அதிரடி எதிர் தாக்குதல்களின் மூலம் இதுவரை சுமார் 470 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீட்டுள்ளன.

இந்த மோதல்களில் சுமார் 11,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை முறியடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் இந்த ‘காமிகாஸே’ (Kamikaze) டிரோன் தாக்குதல்கள், நவீன போர் முறையில் டிரோன்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு வலிமையானது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

ரஷ்யாவின் கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், மாஸ்கோவின் பதில் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவு குறைத்துள்ளன.

தற்போது வான்வெளியில் உக்ரைன் டிரோன்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், ரஷ்யப் படைகள் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பமும், துல்லியமான திட்டமிடலும் ஒரு சிறிய படையையும் வலிமையானதாக மாற்றும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என மேலைத்தேய ஊடகங்கள் குறி்பிடுகின்றன.

Recommended For You

About the Author: admin