காரில் வசித்த முன்னாள் ஆசிரியருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆச்சரியம்

காரில் வசித்த முன்னாள் ஆசிரியருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆச்சரியம் – 27,000 டொலர் நிதி சேகரித்து நெகிழ வைத்த மாணவன்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில், வேலைக்குச் செல்லும் வழியில் தினமும் காரில் வசித்து வந்த முதியவர் ஒருவரைக் கவனித்த ஸ்டீவ் நவா (Steve Nava) என்ற இளைஞர்,

அவர் வேறு யாருமல்ல, ‘Mr. V’ என அன்போடு அழைக்கப்பட்ட தனது முன்னாள் பகர ஆசிரியர் (Substitute Teacher) 77 வயதான ஜோஸ் வில்லாரூயல் (José Villaruel) என்பதைப் கண்டறிந்தார்.

 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை இழந்து, நிதி நெருக்கடியால் காரிலேயே வசித்து வந்த ஆசிரியர் ஜோஸ், தனது சொற்ப சமூகப் பாதுகாப்பு வருமானத்தின் பெரும்பகுதியை மெக்சிகோவில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது மனைவிக்கு அனுப்பி வைத்து வந்துள்ளார்.

 

ஆசிரியரின் இந்த அவல நிலையை அறிந்து மனமுடைந்த ஸ்டீவ் நவா, உடனடியாக அவருக்கு தற்காலிகமாக தங்குவதற்கு விடுதி அறையையும் 300 டொலர் பணத்தையும் வழங்கி உதவியுள்ளார்.

 

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், தனது சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் நிதி திரட்டும் இணையதளம் மூலம் தனது முன்னாள் ஆசிரியரின் நிலையை விளக்கி நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

 

மாணவர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் மேயர் அலுவலகத்தின் ஆதரவோடு, நவா நிர்ணயித்த 15,000 டொலர் இலக்கைத் தாண்டி, வெறும் மூன்றே நாட்களில் 27,000 டொலர் நிதி திரட்டப்பட்டது.

 

ஆசிரியர் ஜோஸின் 77வது பிறந்தநாளன்று, அவரது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி “ஹேப்பி பர்த்டே” பாடலுடன் இந்த 27,000 டொலர் செக்கை அவருக்கு வழங்கிப் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தினர்.

 

இந்த நெகிழ்ச்சியான உதவியைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ஆசிரியர் ஜோஸ், இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்; என் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்” எனத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

 

ஆசிரியர்கள் நமக்குக் கற்பித்த பாடங்களுக்குத் திரும்பச் செய்யும் நன்றிக்கடனாக அமைந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Recommended For You

About the Author: admin