ஆபத்தில் மனித குலத்தின் எதிர்காலம்! தி லான்செட் இதழின் திடுக்கிடும் எச்சரிக்கை அறிக்கை!

ஆபத்தில் மனித குலத்தின் எதிர்காலம்! தி லான்செட் இதழின் திடுக்கிடும் எச்சரிக்கை அறிக்கை!

பிரபல மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை,

2100ஆம் ஆண்டுக்குள் மனித குலம் முற்றிலுமாக அழி*ந்துவிடுவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

 

அணு ஆயுதப் போ*ர்களின் அதிகரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு ஆகியவை மனித இனத்தையே வேரோடு அழி*த்துவிடும் அளவுக்குப் பேரா*பத்தை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

உலக நாடுகள் பலவற்றுக்கு இடையே அதிகரித்து வரும் அணு ஆயுத மோதல்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முறையற்ற மற்றும் தகாத நோக்கிலான பயன்பாடுகளும் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

 

இந்தக் காலக்கெடுவிற்குள் மனித குலம் கண்டிப்பாக அழிந்துவிடும் என்று அறிக்கை உறுதிபடக் கூறாவிட்டாலும், அதற்கான ஆபத்துகளும் பாதகமான சூழ்நிலைகளும் மிக வேகமாக அதிகரித்து வருவதை இது எச்சரிக்கிறது.

 

அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல்கள் தவிர, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, ஆபத்தான தொற்றுநோய்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவையும் மனிதகுலத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியவை.

 

இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க உலக நாடுகள் உடனடியாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும்,

 

பொறுப்புணர்வுடனான தொழில்நுட்பப் பாவனையும் சரியான கொள்கைகளும் மட்டுமே மனிதகுலத்தைக் காப்பாற்றும் என்றும் அவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

Recommended For You

About the Author: admin