“ஹார்முஸ் நாயகன்” அலிசா மசூமி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

“ஹார்முஸ் நாயகன்” அலிசா மசூமி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முக்கிய தளபதியும், “ஹார்முஸ் நாயகன்” (Hero of Hormuz) என்று அழைக்கப்படுபவருமான அலிசா மசூமி (Alireza Masoumi), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணைப் பகுதியின் பாதுகாப்பிற்கும், கடற்படை நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்கியவர் என்பதால் இவர் ஈரானிய இராணுவத்தில் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார்.

சிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கு அருகிலுள்ள ஈரானிய இராணுவ முகாம் ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.

ஈரானின் ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் மசூமி ஈடுபட்டிருந்ததாக இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் (Mossad) தெரிவித்துள்ளது.

“எமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எவரும் தப்ப முடியாது” என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் (Yoav Gallant) இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அலிசா_மசூமி உலக எரிபொருள் விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) அமெரிக்க மற்றும் மேற்கத்திய கப்பல்களுக்கு சவால் விடுத்தவர்.

ஈரானின் அதிவேக தாக்குதல் படகுகள் மற்றும் கடல்சார் கண்ணிவெடித் திட்டங்களின் மூளையாகச் செயற்பட்டவர் என்பதுடன் முன்னாள் தளபதி காசிம் சுலைமானியின் நெருக்கமானவர். காசிம் சுலைமானியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இவர் போற்றப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் உயர் மட்டத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். “மசூமியின் தியாகத்திற்குப் பொருத்தமான நேரத்தில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

Recommended For You

About the Author: admin