இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்: பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி!
சமீபத்திய பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பின் ஒரு கட்டமாக, ரஷ்யா இலங்கைக்குச் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு உத்தியோகபூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, தற்போது இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது ரஷ்யாவிலிருந்து உயர்தரமான சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் என்பன இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. இந்த எரிபொருள் விநியோகம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தை விலையை விடச் சாதகமான விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
ரஷ்யாவின் இந்த இணக்கப்பாடு இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் தேவையினைத் தடையின்றிப் பூர்த்தி செய்ய உதவும்.
குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்குமாயின், அது நாட்டில் போக்குவரத்து மற்றும் மின்சார உற்பத்திச் செலவுகளைக் குறைக்க வழிவகுக்கும்என்பதுடன்
இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நீண்டகால இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகள் இதன் மூலம் மேலும் பலமடையும்.

