2026 உலகின் சிறந்த ரயில் இயக்குநர் விருதை வென்றது கத்தார் ரயில் நிறுவனம்!

2026 உலகின் சிறந்த ரயில் இயக்குநர் விருதை வென்றது கத்தார் ரயில் நிறுவனம்!

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான Global Light Rail Awards விருது வழங்கும் நிகழ்வில், கத்தார் ரயில் நிறுவனம் (Qatar Rail) “Worldwide Operator of the Year” என்ற உலகளாவிய விருதை வென்றுள்ளது.

தோஹா மெட்ரோ மற்றும் லுசைல் டிராம் சேவைகளின் பாதுகாப்பு, செயல்திறன், பயணிகளுக்கான சிறந்த சேவை, புத்தாக்கம் மற்றும் நிலையான போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

2025ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA அரபுக் கிண்ண கால்பந்துப் போட்டியின்போது, கத்தார் ரயில் நிறுவனம் 4.9 மில்லியன் பயணிகளுக்குச் சேவையாற்றியதுடன், 99.99 சதவீத செயல்பாட்டுத் திறனையும் பதிவு செய்துள்ளது. அக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2026ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 200,000 பயணிகளுக்கு இந்நிறுவனம் சேவையாற்றி வருகின்றது. மேலும், அதன் சேவைச் செயல்திறன் 98 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

 

இந்த விருது கத்தாரின் பொதுப் போக்குவரத்துத் துறையின் சர்வதேச அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், நாட்டின் நிலையான போக்குவரத்து வளர்ச்சிக்கும் பங்களிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin