💫ஜாதகத்தில் மாரக ஸ்தானமும்,மாரகாதிபதியும்:💫
✨ஜாதகத்தில் இரண்டு மற்றும் ஏழாம் ஆகிய பாவங்கள் ஆனது பொது மாரக ஸ்தானங்கள் ஆகும்.
✨இந்த பொது மாரகாதிபதிகளும் தான் ஜாதகத்தில் இருக்கும் நிலைக்கு ஏற்ப மரணத்தையும் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பங்களையும் தருவார்கள்.
✨இந்த பொது மாரகஸ்தானங்கள் மட்டுமல்லாமல், ஒவ்வொரு லக்னத்திற்கும் தனித்தனி மாரக ஸ்தானம் மற்றும் கிரகங்களானது கொடுக்கப்பட்டுள்ளது, அதனை லக்னாவாரியாக, எந்த லக்னத்திற்கு எந்த ஸ்தானம் மாரக ஸ்தானமாகவும்,எந்த கிரகம் மாரகாதிபதியாக வரும் என்பதை கீழே விரிவாக கொடுக்கின்றேன்.
✨மேஷம்:
இரண்டு மற்றும் ஏழாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் லக்ன மாரகாதிபதியாக மற்றும் பொது மாரகாதிபதியாக இதே சுக்கிரனே வருவார்.
✨ரிஷபம்:
மூன்று மற்றும் எட்டாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
ரிஷப லக்னத்திற்கு சந்திரனும் குருவும் லக்ன மாரகாதிபதிகளாக வருவார்கள், இது மட்டுமல்லாமல் புதன், செவ்வாய் பொது மாரகாதிபதிகளாக வருவார்கள்.
✨மிதுனம்:
ஏழு மற்றும் பதினொன்றாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
மிதுன லக்னத்திற்கு குருவும்,செவ்வாயும் லக்ன மாரகாதிபதிகளாகவும் சந்திரன் பொது மாரகாதிபதியாக வருவார்.
✨கடகம்:
இரண்டு மற்றும் ஏழாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
கடக லக்னத்திற்கு சூரியனும் சனியும் லக்ன மாரகாதிபதி மற்றும் பொது மாரகாதிபதிகளாக வருவார்கள்.
✨சிம்மம்:
மூன்று மற்றும் எட்டாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
சிம்ம லக்னத்திற்கு சுக்ரன் மற்றும் குருவும் லக்ன மாரக அதிபதிகளாகவும், புதன் மற்றும் சனி பொது மாரகாதிபதிகளாக வருவார்கள்.
✨கன்னி:
ஏழு மற்றும் பதினொன்றாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
கன்னி லக்னத்திற்கு குரு மற்றும் சந்திரன் லக்ன மாரகாதிபதிகளாகவும், சுக்கிரன் பொது மாரக அதிபதியாக வருவார்.
✨துலாம்:
இரண்டு மற்றும் ஏழாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
துலா லக்னத்திற்கு செவ்வாய் ஒருவரே லக்ன மாரக அதிபதியாகவும், பொது மாரக அதிபதியாகவும் வருவார்.
✨விருச்சிகம்:
மூன்று மற்றும் எட்டாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
விருச்சிக லக்னத்திற்கு சனி மற்றும் புதன் லக்ன மாரக அதிபதியாகவும், குரு மற்றும் சுக்கிரன் பொது மாரக அதிபதியாகவும் வருவார்கள்.
✨தனுசு:
ஏழு மற்றும் பதினொன்றாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
தனுசு லக்னத்திற்கு புதன் மற்றும் சுக்கிரன் லக்ன மாரக அதிபதியாகவும், சனி பொது மாரக அதிபதியாக வருவார்.
✨மகரம்:
இரண்டு மற்றும் ஏழாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
மகர லக்னத்திற்கு லக்னாதிபதி சனியும் மற்றும் சந்திரன் லக்ன மாரகாதிபதியாகவும், இவர்களே பொது மாரகாதிபதியாகவும் வருவார்கள்.
✨கும்பம்:
மூன்று மற்றும் எட்டாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்.
கும்ப லக்னத்திற்கு செவ்வாய் மற்றும் புதன் லக்ன மாரக அதிபதியாகவும், குரு மற்றும் சூரியன் பொது மாரகாதிபதியாகவும் வருவார்கள்.
✨மீனம்:
ஏழு மற்றும் பதினொன்றாம் பாவகம் மாரகஸ்தானமாக வரும்
மீன லக்னத்திற்கு புதன் மற்றும் சனி லக்ன மாரக அதிபதிகளாகவும், செவ்வாய் பொது மாரகாதிபதியாகவும் வருவார்.
✨மேலே ஒரு லக்னத்திற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள லக்ன மாரகாதிபதிகள் யார் என்பதையும், பொதுவான மாரகாதிபதிகள் யார் என்பதை பற்றி மேலே விரிவாக கொடுத்துள்ளேன்.

