யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-ஆம் மண்டலங்கள் ஒக்டோபர் 16 முதல் மீண்டும் திறப்பு!

யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2-ஆம் மண்டலங்கள் ஒக்டோபர் 16 முதல் மீண்டும் திறப்பு!

வறட்சி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனஜீவராசிகள் பூங்காவின் 1 மற்றும் 2-ஆம் மண்டலங்கள், எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

 

கடும் வறட்சியால் விலங்குகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டும், வனப் பாதைகளை புனரமைக்கும் நோக்கிலும் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் இவை மூடப்பட்டிருந்தன.

 

தற்போது பூங்கா திறக்கப்படுவதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள் மற்றும் தங்குமிட முகாம்களை முன்பதிவு செய்யும் வசதிகள் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin