💫ஜோதிடத்தில் திரிகோண ஸ்தானங்களின் முக்கியத்துவம்:💫
✨ஜோதிடத்தில் ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய பாவகங்கள் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகிறது.
✨பொதுவாகவே இந்த திரிகோண ஸ்தானங்கள் ஆனது ஜோதிடத்தில் உயர்நிலை பாவங்களாக கருதப்படுகிறது.
✨ஒரு ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்களின் பலன்களை, இந்த ஜென்மத்தில் அவர் அனுபவிக்க கூடிய பாக்கியங்கள் போன்றவைகளை இந்த திரிகோண ஸ்தானங்களே கொண்டிருக்கின்றன.
✨லக்னம் என்பது அந்த ஜாதகரின் நிலையையும்,ஐந்தாம் பாவகம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும், அதாவது ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் செய்ய புண்ணியங்களை குறிக்கின்றது.
✨ஒன்பதாம் பாவமானது பாக்கியஸ்தானம் இந்த ஜென்மத்தில் அவர் அனுபவிக்க கூடிய பாக்கியங்களை மேலும் இந்த ஜென்மத்தில் அவர் சேர்க்கின்ற புண்ணியங்களையும் இந்த ஒன்பதாம் பாவமானது கூறும்.
✨ஏனெனில் ஒன்பதாம் பாவமானது தர்ம ஸ்தானம் அதாவது இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் தர்மங்களையும்,அதன்மூலமாக இந்த ஜென்மத்தில் நாம் சேர்க்கும் புண்ணியங்களை இந்த ஒன்பதாம் பாவமானது குறிக்கும்.
✨எனவே இந்த மூன்று பாவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாகவே இருக்கும், மேலும் இந்த திரிகோண ஸ்தானமானது லட்சுமி ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது.
✨இந்தத் திரிகோண ஸ்தானங்கள் ஆனது வலுத்த ஒரு ஜாதகர் யோகராகவே கருதப்படுகிறார், அதிலும் இந்த மூன்று பாவங்கள் வலுப்பெற்ற நிலையில் சுப தன்மையுடன் இருக்கும் போது அந்த ஜாதகர் உயர்நிலையை அடைவார்.
✨இந்த மூன்று பாவகங்களில் லக்னமே முதன்மையான பாவகம் ஆகும். ஜோதிடத்தில் திரிகோணம் மற்றும் கேந்திரம் ஆகிய பாவங்கள் உயர்நிலையாக கருதப்படுகின்றது, இதில் லக்னம் என்பது கேந்திரம் மற்றும் திரிகோணம் ஆகிய இரண்டையும் இணைக்கும் பாவகம் ஆகும்.
✨எனவே தான் லக்னமே உயர்நிலை பாவகமாகும்,லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுத்த ஒரு ஜாதகரே அனைத்து யோகங்களையும் அனுபவிப்பவராகவும் இருப்பார், அதேபோல் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுத்த ஒரு ஜாதகத்தில் தான் யோகங்களானது செயல்படும்.
✨ஒரு ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், அந்த ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருக்கும் பொழுது, அந்த யோகங்கள் செயல்படுவதில்லை இதனை இதற்கு முன்பே சில கட்டுரைகளில் எழுதி உள்ளேன்.
✨ஐந்து, ஒன்பதாம் பாவங்கள் வலுப்பெற்று இருந்தாலும் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் இருக்கும் பொழுது ,ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகங்களுக்கு ஏற்ப, ஜாதகருக்கு அனைத்து வகையான செல்வம் போன்ற மற்ற அமைப்புகள் இருந்தாலும் அந்த ஜாதகர் அதனை அனுபவிப்பதில் தடையோ அல்லது ஏதேனும் குறையோ இருக்கும்.
✨உதாரணமாக ஜாதகர் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த நிலையில் இருந்தாலும், அனைத்தையும் அனுபவிக்கும் நிலையில் இருந்தாலும், அந்த குடும்பத்தில் அவரின் மதிப்பானது ஒன்றுமில்லாததாகவே இருக்கும், அதாவது அந்த குடும்பத்தில் மற்றவர்களைவிட இவரின் மரியாதை ஆனது குறைவுபட்டதாகவே இருக்கும்,இதுவே லக்னம் மற்றும் லக்னாதிபதியின் நிலையாகும்.
✨ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய பாவக அதிபதிகள் ஆட்சி, உச்சம் போன்ற நிலையில் வலு பெற்றிருப்பது நல்ல நிலை என்றாலும், அதிலும் இது போன்ற நிலையில் அவை சுபத்தன்மை அடைந்திருப்பது என்பது மிகவும் முக்கியம்.
✨ஒன்று, ஒன்பது, ஐந்து ஆகிய பாவங்களின் அதிபதியாக பாவ கிரகங்கள் வரும் நிலையில், அவை அதே பாவகத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்வது நல்ல நிலை அல்ல, பாவ கிரகங்கள் எனும் நிலையில் அவை தனது சொந்த வீடாக இருந்தாலும் இது போன்ற திரிகோண ஸ்தானங்களுக்கு அதிபதியாக வரும் பொழுது, அந்த பாவகத்தில் அமர்வது என்பது அமரும்அந்த பாவகத்தை கெடுக்கவே செய்யும்.
✨அதேபோல சுப கிரகங்களின் வீடானது திரிகோணமாக அமையும் நிலையில், அதில் பாவ கிரகங்கள் அமர்வதும் நல்ல நிலை அல்ல. இது போன்ற நிலையில் அந்த பாவகத்தில் ஒரு சுப கிரகமானது அமர்வது நன்மையை தரும்.
✨ஆனால் ஒரு பாவ கிரகங்கள் வீடானது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகி திரிகோண ஸ்தானங்களாக அமையும் பொழுது,அந்த பாவ கிரகமானது அந்த திரிகோண ஸ்தானத்தில் ஆட்சி எனும் நிலை பெறாமல் அந்த ஸ்தானத்திற்கு நட்பு கிரகங்களின் வீடுகளில் மறைந்திருப்பது, அல்லது உபஜெய ஸ்தானங்களில் உச்சம் எனும் நிலையில் அடைவதும் நன்மையாகவும்.
✨ஒரு பாவ கிரகம் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாக வந்து, அவை அந்த திரிகோண ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து இருந்தால், அந்த பாவ கிரகத்திற்கு வலுவான ஒரு சுப கிரகத்தின் தொடர்பானது கட்டாயம் அவசியமாகும்.
✨அதேபோல சுப கிரகங்களின் வீடானது திரிகோணமாக அமையும் நிலையில், அதில் அந்த சுபகிரகம் ஆட்சிபெற்று அமர்வதும் அல்லது அந்த திரிகோண ஸ்தானத்தில் மற்றொரு சுப கிரகம் அமர்ந்திருப்பது நல்ல நிலையாகும்.
✨ஒரு திரிகோண ஸ்தானாதிபதியின் தசா ஆனது வரும்போது நல்ல பலன்களை தரும், ஏனெனில் இந்த திரிகோண ஸ்தான கிரகங்கள் ஆனது ஒன்றுடன் ஒன்று நட்பு எனும் நிலையில் கொண்டிருக்கும்.
எந்த ஒரு லக்னத்திற்கும் அதன் நட்பு கிரகங்களே திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும்.
✨எனவே லக்னத்திற்கு நட்பு கிரகங்களின் தசாவானது நன்மையை செய்யும் என்ற நிலையில், அவை இது போன்ற ஒரு சுப ஆதிபத்தியத்திற்கு அதிபதியாகவும் இருந்து, சுப தன்மையுடன் தசா நடத்தும் போது நல்ல பலன்களை தரும்.
✨ஒரு சுப கிரகம் ஆனது திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாகி, அந்த கிரகம் ஆட்சி எனும் நிலையில் அமர்வது நல்ல யோகங்களை செய்யும், அதேபோல ஒரு சுப கிரகம் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதி எனும் நிலையை பெற்று பாவத்தன்மை அடையாமல் அவர் தசா நடத்தும் காலங்களும் நல்ல யோக பலன்களை செய்யும்.
✨திரிகோண அதிபதி அந்த பாவகத்தில் ஆட்சி எனும் நிலையை பெற்று அமரும் பொழுதும், உச்சம் பெற்று இருக்கும் நிலையிலும், அல்லது நட்பு நிலையில் அமர்ந்து சுப கிரக தொடர்பினை பெற்று சுப தன்மையுடன் தசா நடத்தும் காலங்களானது யோகம் செய்யும்.
✨இந்த சுப கிரகங்கள் திரிகோண ஸ்தான அதிபதிகளாக இருந்து, பாவ கிரகங்களின் சேர்க்கையை அல்லது தொடர்களை பெறாமல் இருப்பது மிகவும் நல்லது, ஏனெனில் அந்த கிரகம் சுப ஆதிபத்தியம் பெற்றிருக்கும் நிலையில் இயற்கையாகவே சுப கிரகமாக இருக்கும் பொழுது, ஒரு பாவ கிரக தொடர்பினை பெரும்பொழுது அதன் சுப காரகத்துவங்களும், அது பெற்ற சுப ஆதிபத்யமும் கெடவே செய்யும்.
✨அதேபோல ஒரு திருக்கோண ஸ்தான அதிபதி கேந்திரத்தில் அமர்ந்து தசா நடத்தும்போது நல்ல பலன்களை செய்யும்.
✨ஒரு பாவ கிரகம் கேந்திரங்களில் இருப்பது நன்மை என்று கூறப்பட்டுள்ளது போல்,அதிலும் குறிப்பாக ஒரு பாவ கிரகம் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாக இருக்கும் நிலையில், அந்த கிரகம் ஒரு கேந்திரத்தில் அமர்ந்து வலுப்பெற்ற ஒரு சுப கிரகத்தின் தொடர்பினையும் பெற்று தசா நடக்கும்போது, அது தன் சுப ஆதிபத்திய பலன்களை நல்ல நிலையில் தரும்.
✨நான் முன்னரே கூறியது போல திரிகோண ஸ்தானங்கள் ஆகிய இந்த மூன்று பாவங்களும் வலுவான நிலையில் உள்ள ஒரு ஜாதகர் நல்ல நிலையினை அடைவார்.
✨ஒரு ஜாதகத்தில் அவயோக தசாவானது நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது, அந்த ஜாதகருக்கு வலுப்பெற்ற ஒரு சுப கிரக தொடர்புடன், ஒரு திருக்கோண அதிபதி வலுப்பெற்று இருக்கும் நிலையில் வரும் புத்தியானது, அந்த அவயோக தசாவில் நல்ல பலன்கள் செய்து அந்த ஜாதகரை கெடுபலன்களில் இருந்து மீட்டெடுக்கும்.
✨அதுபோல ஒரு ஜாதகத்தில் வலுப்பெற்ற நிலையில் சுப தன்மையும் அடைந்த ஒரு திரிகோண ஸ்தான அதிபதியின் தசாவானது நடைபெறும் பொழுது அந்த ஜாதகருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் அந்த திரிகோண ஸ்தான அதிபதியின் தசாவானது கொடுக்கும்.

