வளைகுடாவில் பதற்றம் ; ஈரான் உயர்மட்டத் தளபதிகள் கூட்டத்தில் தாக்குதல்… 15 பேர் பேர் பலி.
மேற்கு ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அமைந்துள்ள ஈரான் ஆதரவுப் படைகளின் தலைமையகத்தை இலக்கு வைத்து இன்று (24) அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், பிராந்தியத் தளபதி உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஈராக்கின் ‘ஹாஷத் அல்-ஷாபி’ என அழைக்கப்படும் மக்கள் அணிதிரட்டல் படைகளின் அன்பார் மாகாண நடவடிக்கைகளுக்கான தளபதி சாத் அல்-பைஜி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தோடு அவருடன் மேலும் 14 போராளிகளும் உயிரிழந்துள்ளனர். உயர்மட்டத் தளபதிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு மீளாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

