பிரான்ஸ் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) என்ற பயணிகள் டிஜிட்டல் எல்லை பதிவு அமைப்பை முழுமையாக செயல்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த அமைப்பு முழுமையாக அமலுக்கு வந்தால் ஷெங்கன் பகுதியில் பாஸ்போர்ட் முத்திரை (passport stamp) நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கைரேகை மற்றும் முகபடம் போன்ற உயிரியல் தரவுகள் (biometric data) பதிவுசெய்யப்படும்.
ஆனால் பிரான்ஸில் அமைக்கப்பட்டுள்ள சுய சேவை கியோஸ்க் (self-service kiosks) மற்றும் டேப்லெட் சாதனங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதால் தற்போது தகுதியுள்ள பயணிகளில் சுமார் பாதி பேரே டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகின்றனர்.
இதனால் எல்லை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீண்டும் கையேடு முறையில் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கியோஸ்க் இயந்திரங்கள் பாரிஸ் சார்ல் -டெ-கோல் விமான நிலையம் ஓர்லி விமான நிலையம் யூரோஸ்டார் நிலையங்கள் மற்றும் பெர்ரி துறைமுகங்களில் நிறுவப்பட்டுள்ளன….

