இரான் போரில் அமெரிக்காவுக்கு 11 பில்லியன் டாலர் இழப்பு – ரகசிய அறிக்கை!!

இரான் போரில் அமெரிக்காவுக்கு 11 பில்லியன் டாலர் இழப்பு – ரகசிய அறிக்கை!!

இரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் முதல் 6 நாட்களில் மட்டும் அமெரிக்கா சுமார் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த தகவல் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் காங்கிரஸில் வழங்கிய ரகசிய விளக்கக் கூட்டத்தில் வெளியானதாக கூறப்படுகிறது.

 

இந்த செலவில் முக்கியமாக டோமஹாக் ஏவுகணைகள், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான செலவுகள் அடங்கும். இந்த தொகை போரின் முழு செலவாக அல்ல ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட செலவுகளே இவ்வளவு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் போரின் தொடர்ச்சிக்காக அமெரிக்க அரசு கூடுதலாக 50 பில்லியன் டாலர் வரை நிதி கேட்கக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நடந்து கொண்டிருக்கும் இந்த மத்திய கிழக்கு மோதல் உலகளாவிய பொருளாதாரம்,எண்ணெய் விலை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin