தாய்கிழவி படத்தால் தமிழ் சினிமாத்துறையே குழம்பிப் போய் இருக்கிறது.

தாய்கிழவி படத்தால் தமிழ் சினிமாத்துறையே குழம்பிப் போய் இருக்கிறது.

என் வாழ்க்கையில் 2 ஆண்கள் மிக முக்கியமானவர்கள் – நடிகை ராதிகா சரத்குமார் ஓபன்டாக்

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் தாய்கிழவி.

இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தாய்கிழவி படத்தில் கதை நாயகியாக நடித்த ராதிகா சரத்குமார் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

 

அந்த விழாவில் ராதிகா சரத்குமார் பேசியதாவது, உண்மையான வெற்றியைக் கொண்டாட இந்த மேடையில் நான் இப்போது நிற்கிறேன். நான் எதையும் சீரியஸாக எடுத்துக்க மாட்டேன். இது உண்மையான வெற்றி. 150 ரூபாய் டிக்கெட் விற்று 50 கோடி ரூபாய் கலெக்சன் வந்துள்ளது. சில ஹீரோக்களின் படங்கள் 1000 ரூபாய் 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ததை நான் பார்த்திருக்கிறேன்.

 

குறைந்த டிக்கெட் விலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. பெண்களுக்காக குறைந்த விலையில் விற்பனை செய்த டிக்கெட் வசூல் மூலம் இந்த பெரிய லாபம் வந்துள்ளது. ராதிகாவுக்கு இந்த படம் ஓட வேண்டும் என்று கமல்ஹாசன் சொன்னார். இயக்குனர் சிவக்குமார் முருகேசன் ஜெயிக்க வேண்டும் என்றும் கமல் சொன்னார். ஸ்ரீதர் பாலச்சந்தர் பாரதிராஜா என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இயக்குனர் சினிமாவுக்கு வருவார்கள்.

 

அவர்கள் சினிமாவின் போக்கை மாற்றுவார்கள். அப்படித்தான் சிவக்குமார் முருகேசன் வந்திருக்கிறார். எனது இத்தனை நாள் கலைப்பயணத்தில் இந்த படத்தின் வெற்றியை பார்த்தது பெரும் பாக்கியம். சித்தி சீரியல் வெற்றிக்கு பிறகு இந்த படத்தில்தான் பெண்கள் கனெக்ட் ஆனதை பார்க்க முடிகிறது. நேற்று மட்டும் 6 கதைகள் கேட்டேன். எல்லாமே கிழவி கேரக்டராக கூறுகிறார்கள்.

 

அனைத்து பெண்களிடம் சினிமா தொழில் குறித்த அச்சம் இருக்கும். அந்த அச்சத்தை என் மனதில் எடுத்துக் கொள்ள மாட்டேன். இந்த படத்தால் சினிமா துறையே குழம்பிப் போய் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் தியேட்டருக்கு போன் செய்து உண்மையாகவே இந்த வசூல் வருகிறதா என கேட்கிறார்கள். படத்தின் கண்டென்ட் மட்டுமே கிங் என்பதை தாய்க்கிழவி நிரூபித்து இருக்கிறது.

 

இந்த படத்தில் முதல் முறையாக லாபத்தில் கிடைக்கும் பங்கை சம்பளமாக பெற்றுள்ளேன். இப்படி தமிழில் யாரும் இதுவரை சம்பளம் பெற்றது இல்லை. தமிழ் திரை உலகிலேயே லாபத்தில் பங்கில் சம்பளம் பெற்ற கதாநாயகி நானாக தான் இருப்பேன். பெண்கள் முன்னேற்றம் என கதையில் மட்டும் சொல்லாமல் ஹீரோவுக்கு இணையாக லாபத்தில் பங்கு கொடுத்த பெருமை வந்துள்ளது. தமிழக முதல்வர், தாய்க்கிழவி படத்துக்கு வரிச்சலுகை கொடுக்க வேண்டும். என் வாழ்க்கையில் இரண்டு எஸ் கே முக்கியமானவர்கள். ஒருவர் சரத்குமார் இன்னொருவர் சிவகார்த்திகேயன் என்று நடிகை ராதிகா சரத்குமார் பேசியிருக்கிறார்.

Recommended For You

About the Author: admin