விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ..

விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி

நடிகர் விஜய் குடும்பத்தைச் சுற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல சர்ச்சைகள் பேசப்பட்டு வரும் நிலையில், அதனுடன் தொடர்பாக சமூக வலைதளங்களில் புதிய விவாதம் ஒன்றும் உருவாகியுள்ளது.

விஜய் குறித்து மீம்கள் மற்றும் கலாய்ப்பு வீடியோக்கள் அதிகமாக பரவி வரும் சூழலில், பழைய திரைப்படக் காட்சியை பயன்படுத்தி சிலர் அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அந்த காட்சி நடிகை அம்பிகா Ambika நடித்த ஒரு பழைய திரைப்படக் காட்சியாகும்.

 

அம்பிகா காட்சியை வைத்து கலாய்ப்பு

 

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் அம்பிகா தன்னுடைய புருஷனை பார்த்து, நீ வெளியே என்னதான் வேஷம் போட்டாலும் வீட்டுக்குள் பொண்டாட்டியை ஏமாற்றும் துரோகியாக இருக்கிறாய். வீட்டில் இருக்கும் பெண்ணையே மதிக்காத நீ எப்படி முதலமைச்சராக முடியும் என்று தன்னுடைய கணவரை சுட்டுக் கொள்வது போல இருக்கும் அதை பகிர்ந்த ரசிகர்கள், “என்னடா எல்லா படமும் அண்ணனுக்கு sync ஆகுது” போன்ற வாசகங்களை சேர்த்து விஜயை கலாய்க்கும் விதத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருவதால் அது விரைவாக பரவியது. இதை பார்த்த நடிகை அம்பிகா அதற்கு எதிராக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

காயப்படுத்த பயன்படுத்தாதீர்கள்

 

அம்பிகா வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது: “இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன். தயவு செய்து என் புகைப்படங்கள் அல்லது நான் நடித்த காட்சிகளை வைத்து யாரையும் காயப்படுத்தவோ, விமர்சிக்கவோ, அவமதிக்கவோ பயன்படுத்தாதீர்கள். எந்த ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விஷயங்களிலும் நான் தலையிடும் இடத்தில் இல்லை. அதுபோல் என் காட்சிகளை பயன்படுத்தி இப்படி கலாய்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து இதை நிறுத்துங்கள்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

விஜயை சுற்றி தொடரும் குடும்ப சர்ச்சை

 

இதற்கிடையில் நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை தொடர்பாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரது மனைவி சங்கீதா Sangeetha Sornalingam விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்கவில்லை என்று கூறி அவர் மீண்டும் மனு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

 

திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் விஜய்

 

இந்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, நடிகை Trisha Krishnan உடன் விஜய் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவின. இருவரும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்தது, அது ரசிகர்கள் மத்தியில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மகளிர் தின கொண்டாட்டத்தில் விஜய் பேசும் போது என்னுடைய குடும்ப விஷயத்தை கேட்டு நீங்கள் வருத்தப்படுவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது, அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல.. அதை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். தன்னுடைய காதல் மனைவியை விஜய் துச்சமாக பேசியதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin