கட்டாருக்கு மேலும் நான்கு டைபூன் போர் விமானங்கள் அனுப்பப்ப UK தீர்மானம்!
பிரிட்டனின் Ministry of Defence (பாதுகாப்பு அமைச்சகம்) இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் நான்கு Eurofighter Typhoon போர் விமானங்களை Qatar நாட்டிற்கு அனுப்பப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போர் விமானங்கள் Royal Air Force (RAF) சார்பில் அனுப்பப்படுகின்றன. இவை, பிரிட்டன் – கட்டார் இணைந்த டைபூன் படை பிரிவின் கீழ் முன்னரே பணியில் இருந்த விமானங்களுக்கு மேலதிக ஆதரவாக அமையும்.
ஏற்கனவே இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்தவும், பிரிட்டிஷ் மக்களையும் பிரிட்டனின் நலன்களையும் பாதுகாக்கவும் சில டைபூன் விமானங்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தன.
புதியதாக அனுப்பப்படும் இந்த நான்கு போர் விமானங்களும் அந்த நடவடிக்கைகளுக்கு மேலதிக பலத்தை வழங்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “பிரிட்டன் தனது கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்கும். எங்கள் மக்களையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்காது” எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

