கோடரித்தாக்குதல் – 28 வயது குடும்பஸ்தர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!!
குடும்பத்தகராறின் போது மனைவியின் சகோதரனால் கோடரித்தாக்குதலுக்குள்ளான நிலையில் மீராவோடையைச்சேர்ந்த (தமிழ்) 28 வயது குடும்பஸ்தர் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (04) நள்ளிரவில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராரின் போது மனைவியின் பெரியம்மாவின் மகனான மைத்துனர் கோடாரியால் தாக்கி தலையில் காயப்படுத்திய சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

