தற்போது மத்தியகிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல், வெறும் எல்லை மோதல் அல்ல.
இது உலக நாடுகளை ஒரு மாபெரும் போருக்குள் இழுக்கத் தீட்டப்பட்ட மிகத்துல்லியமான ஒரு புவிசார் அரசியல் (Geopolitical Strategy) சதித்திட்டம்.
அது இரண்டாம் வளைகுடா போராக இருக்கலாம் அல்லது மூன்றாம் உலகப்போராக கூட மாறலாம்.
தொடக்கத்தில் மூன்று நாடுகளுக்கு இடையே நிலவிய மோதல், இன்று 13 நாடுகளைத் தாண்டி விரிவடைந்துள்ளது.
இதன் பின்னணியில் உள்ள நுணுக்கமான நகர்வுகளைக் கீழே பார்ப்போம்.
ஒரு நாடு நேரடியாகப் போரில் ஈடுபடுவதைக் காட்டிலும், மற்ற நாடுகளைத் தூண்டிவிட்டுப் போரை நடத்துவது (Proxy War) லாபகரமானது. அதை இஸ்ரேலின் ‘மொசாட்’ அமைப்பு பின்வரும் மூன்று வழிகளில் செய்கிறது.
முலாவது False Flag Operations:
வரலாறு நெடுகிலும் இஸ்ரேல் கையாளும் மிக முக்கியமான ஆயுதம் இது.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீது உலகிற்கு வெறுப்பை உண்டாக்க, அந்த நாடு தாக்குதல் நடத்தியது போன்ற ஒரு போலிச் சூழலை உருவாக்குவது.
உதாரணம்:
சவுதியின் அராம்கோ (Aramco) மற்றும் கத்தாரின் எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதல்கள். ஈரான் இதை மறுத்தாலும், மேற்கத்திய ஊடகங்கள் வழியாக “ஈரான் தான் காரணம்” என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம் சவுதி மற்றும் கத்தாரை ஈரானுக்கு எதிராகப் போர்க்களத்தில் இறக்க முடிகிறது.
இரண்டாவது Energy Leverage எனப்படும் எரிசக்தியை ஆயுதமாக பாவிப்பது;
ஐரோப்பிய நாடுகள் தங்களின் எரிசக்தித் தேவைகளுக்கு (Gas & Oil) மத்திய கிழக்கு நாடுகளையே நம்பியுள்ளன.
கத்தார் மற்றும் சவுதி தளங்களைத் தாக்குவதன் மூலம் ஐரோப்பாவிற்கான எரிபொருள் விநியோகம் முடக்கப்படுகிறது.
தன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாடத் தேவை பாதிக்கப்படும்போது, வேறு வழியின்றி ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது.
மூன்றாவது கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த (Strategic Targets) இடங்களை தாக்குவது:
சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத் தளங்களைத் தாக்குவதன் மூலம், பிரிட்டனை நேரடியாகப் போருக்குள் இழுக்க முடியும். பிரிட்டன் போரில் குதித்தால், நேட்டோ (NATO) ஒப்பந்தத்தின்படி மற்ற ஐரோப்பிய நாடுகளும் (27 நாடுகள்) போரில் பங்கேற்க வேண்டிய சட்ட ரீதியான கட்டாயம் உருவாகிறது.
இந்தப் போர்ச் சூழலால் அதிகம் லாபம் அடைவது நாடுகள் அல்ல, மாறாக ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களே.
BlackRock) போன்ற நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள Lockheed Martin, Raytheon, Northrop Grumman போன்ற நிறுவனங்களுக்குப் போர் என்பது பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகம்.
13 நாடுகள் போரிடுவது இந்த நிறுவனங்களின் பங்குகளை (Stocks) உச்சத்திற்குத் தள்ளும். உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்தாலும், இந்த “சியோனிஸ்ட்” சக்திகளின் வங்கிக்கணக்குகள் மட்டும் நிரம்புகிறது.
வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதோ, அதே போன்றதொரு உத்திதான் இன்றும் கையாளப்படுகிறது.
அன்று அந்தத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயலாகச் சித்தரிக்கப்பட்டு, அதன் மூலம் அமெரிக்கா திட்டமிட்டபடி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களுக்குள் இழுத்து வரப்பட்டது.
இதன் பின்னணியில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கம் மறைந்திருந்தது.
அதே பாணியில், இன்றைய சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் போருக்குள் தள்ளும் முயற்சிகள் நடக்கின்றன.
9/11 காலத்தில் நேரடிப் போர்முறை கையாளப்பட்ட நிலையில், இன்று கட்டார் சவுதி (Aramco) எரிசக்தி நிலையங்கள் மற்றும் கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் நாடுகள் சீண்டப்பட்டு போருக்குள் இழுத்துவரப் படுகின்றன.
இதன் இறுதி இலக்கு, ஈரானை முழுமையாக அழித்து, “Greater Israel” என்ற கனவை நனவாக்குவதே ஆகும்.
அன்று அமெரிக்காவைத் திசைதிருப்பியது போலவே, இன்று ஐரோப்பாவையும் மத்திய கிழக்கு நாடுகளையும் ஒரு நீண்டகாலப் போருக்குள் தள்ளும் சதி மிகத் துல்லியமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.

