ஈரான் புரட்சிகர காவல்படைக்காக (IRGC)
உளவு பார்த்த இரு குழுக்கள் கத்தாரில் கைது!
ஈரானின் புரட்சிகர காவல்படைக்காக உளவு பார்த்த மற்றும் நாசவேலைகளில் ஈடுபட முயன்றதாக இரண்டு குழுக்களைச் சேர்ந்த 10 பேரை கத்தார் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கத்தார் செய்தி முகமை (QNA) வெளியிட்டுள்ள தகவலின் படி கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 10 சந்தேக நபர்கள் எனவும், இவர்களில் 7 பேர் கத்தாரிலுள்ள முக்கியமான மற்றும் இராணுவ நிலைகளை உளவு பார்க்க நியமிக்கப்பட்டவர்கள். மற்ற 3 பேர்நாசவேலைகளைச் (sabotage) செய்வதற்காகத் திட்டமிட்டவர்கள்.
விசாரணையின் போது, தங்களுக்கு ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்பு இருப்பதாகவும், உளவு பார்ப்பதற்கும் நாசவேலைகளைச் செய்வதற்கும் தங்களுக்குப் பணிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலைத் தொடர்ந்து, ஈரான் சமீப நாட்களாக வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

