மன்னார் மாவட்டத்திற்கு பிரதம நீதியரசர் விஜயம்: நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன (Preethi Padman Surasena) அவர்கள், இன்று (2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்த பிரதம நீதியரசரை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என். றிஸ்வான், மற்றும் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப். ஸிஹாரா ஆகியோர் வரவேற்றனர்.
மன்னார் மேல் நீதிமன்றக் கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த விஜயத்தின் போது மன்னார் நீதிமன்றங்களின் தற்போதைய செயற்பாடுகள், வழக்குகளின் முன்னேற்றம் மற்றும் நீதித்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


