லெபனானில் மொசாட் அதிரடி : ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர்!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் பெய்ரூட் (Beirut) பகுதியில் மொசாட் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கையில் ஹெஸ்புல்லா அமைப்பின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைப் பிரிவின் தளபதி மற்றும் அதன் மூலோபாய திட்டமிடல் பிரிவின் தலைவர் ஆகிய இருவரையுமே மொசாட் “கட்டம் கட்டி” தூக்கியுள்ளது.

கொல்லப்பட்டவா்களில் இப்ராஹிம் அக்கில் (Ibrahim Aqil) என்பவா் ர ஹெஸ்புல்லா அமைப்பின் உயர்மட்ட இராணுவக் குழுவான ‘ஜிஹாத் கவுன்சில்’ உறுப்பினராகவும், அதன் அதிரடிப் படையான ‘ரத்வான்’ (Radwan Force) பிரிவின் தளபதியாகவும் செயற்பட்டவர்.

மற்றையவா் அகமது மஹ்மூத் வஹ்பி (Ahmed Mahmoud Wahbi). இவா் ரத்வான் படையின் பயிற்சியாளராகவும், அதன் மூலோபாயத் திட்டமிடல் பிரிவின் முக்கிய அதிகாரியாகவும் இருந்தவர்.

பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இரகசியக் கட்டடத்தின் மீது ஆளில்லா வான்வழித் தாக்குதல் (Drone Strike) அல்லது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல் மூலம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் அந்த இரு தலைவர்களுடன் சேர்த்து அவர்களது மெய்க்காப்பாளர்களும் கொல்லப்பட்டதை லெபனான் பாதுகாப்புத் தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தத் தலைவர்களின் மரணத்தைத் தொடர்ந்து, லெபனான் – இஸ்ரேல் எல்லையில் நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

வட இஸ்ரேலியப் பகுதிகள் மற்றும் இஸ்ரேலிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஹெஸ்புல்லா அமைப்பு நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி வருகிறது.

எல்லையோரக் கிராமங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது. அத்துடன், தனது வான் பாதுகாப்பு அமைப்பான ‘அயன் டோம்’ (Iron Dome) மற்றும் ‘டேவிட்ஸ் ஸ்லிங்’ (David’s Sling) ஆகியவற்றை முழுத் தயார் நிலையில் வைத்துள்ளது.

இஸ்ரேலிய தரைப்படையின் கவச வாகனங்கள் எல்லைப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் ஒரு தரைவழிப் போர் (Ground Offensive) தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்ட சில நாட்களில், லெபனானின் இந்த முக்கியத் தலைவர்களும் வீழ்த்தப்பட்டிருப்பது ஹெஸ்புல்லா அமைப்புக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தப்போவதாக ஹெஸ்புல்லா எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin