ஈரானை இறுதி நேரத்தில் சீனா கைவிட்டுவிட்டதா ?

ஈரானை இறுதி நேரத்தில் சீனா கைவிட்டுவிட்டதா ?

மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகின்றதா ?

ஒரு நாட்டில் போர் பதட்டம் நிலவினால், அந்நாட்டில் உள்ள தங்களது பிரஜைகளை பாதுகாக்கும்பொருட்டு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்துவது வழக்கமான நடைமுறையாகும்.

 

அந்தவகையில் ஈரானிலிருந்து தங்களது பிஜைகளை வெளியேறுமாறு பல நாடுகளும் கோரி வருகின்றது. அவ்வாறு கோரினார்கள் என்பதற்காக ஈரானை கைவிட்டுவிட்டார்கள் என்று அர்த்தமல்ல.

 

ஜெனீவாவில் ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான மூன்றாவது சுற்று பேச்சுக்கு பின்பு 48 மணித்தியாலத்துக்குள் போர் ஆரம்பிக்கலாம் என்ற உச்சக்கட்ட பதட்டம் நிலவுகிறது.

 

இதன் விளைவாக ஈரானின் நட்பு நாடான சீனா, தங்களது நாட்டு பிரஜைகளை ஈரானிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளது. இது சர்வதேச ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுவரையில் அவ்வாறு கோரிக்கை விடுக்காத சீனா, தற்போது தனது பிரஜைகளை அறிவுறுத்தியதானது ஏதோவொரு நம்பகமான உளவுத் தகவல்கள் அடிப்படையிலாக இருக்கலாம்.

 

அதுபோல் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா, தங்களது பிரஜைகளை இஸ்ரேலிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளது.

 

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களது பிரஜைகளை ஈரானிலிருந்து வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தியதற்காக, சீனா ஈரானை கைவிட்டுவிட்டது என்று பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறானவர்கள் எவரும் இஸ்ரேலிலிருந்து தங்களது பிரஜைகளை வெளியேறுமாறு எச்சரித்ததற்காக “இஸ்ரேலை அமெரிக்கா கைவிட்டுவிட்டது” என்று கூறவில்லை.

 

சில நேரம் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது. அதாவது அமெரிக்கா ஈரானின் சில இலக்குகளை தாக்கும். பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவின் சில இலக்குகளை தாக்கும். அத்துடன் போர் முடிந்துவிடும்.

 

ஆனால் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது முழு பலத்தினையும் குவித்துவைத்துள்ள ஆயுத தளபாடங்களை பார்க்கின்றபோது அது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

Recommended For You

About the Author: admin