இலங்கைக்குக் கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயன்ற 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான முந்திரி பருப்புகள் பறிமுதல்: ஒரு நபர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்ட 620 கிலோ உயர் ரக முந்திரி பருப்பு மூடைகளை கியூ பிரிவு (Q-Branch) காவல்துறையினா் இன்று அதிகாலை பறிமுதல் செய்துள்ளனர்.

மரைக்காயர்பட்டினம் கடற்கரையிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவ மணிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இன்று அதிகாலை காவல்துறையினா் அந்தப் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடற்கரையில் நின்றிருந்த பைபர் படகில் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட முந்திரி பருப்பு மூடைகளைச் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் இருவர் கடலில் குதித்து தப்பி ஓடிய நிலையில், மரைக்காயர்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினா் மடக்கிப் பிடித்தனர்.

 

20-க்கும் மேற்பட்ட மூடைகளில் இருந்த 620 கிலோ உயர் ரக முந்திரி பருப்பு (இந்திய மதிப்பில் ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள்.
ஒரு பைபர் படகு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் மண்டபம் சுங்கத்துறை (Customs) அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தப்பியோடிய இருவரை காவல்துறையினா் தேடி வருகின்றனர். இலங்கையில் நிலவும் தேவை காரணமாக, தனுஷ்கோடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளிலிருந்து கஞ்சா, கடல் அட்டை மற்றும் மஞ்சள் வரிசையில் தற்போது முந்திரி பருப்பு கடத்தலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin