சீனாவுக்கு ரகசியப் பயிற்சி வழங்கிய முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி கைது!
அமெரிக்க விமானப்படையின் முன்னாள் பயிற்றுவிப்பு விமானியான (Instructor Pilot) ஜெரால்ட் எடி பிரவுன் ஜூனியர் (Gerald Eddie Brown Jr.), சீன இராணுவ விமானிகளுக்குப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் கீழ் FBI அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், சீன இராணுவத்திற்கு (PLA) தந்திரோபாய விமானப் பயிற்சிகளை வழங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு விமானப் பயிற்சிப் பாடசாலை ஊடாக இந்த ரகசியத் தொடர்புகள் பேணப்பட்டதாகத் தெரியவருகிறது.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வைத்து காவற்துறையினரால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இவர் மீது அமெரிக்காவின் அதிநவீன போர் விமான நுணுக்கங்களை சீனாவுக்குக் கசியவிட்டமை மற்றும் சட்டவிரோதமாக இராணுவப் பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பல வருடங்களாக அமெரிக்க விமானப்படையில் பணியாற்றிய இவர், ஓய்வுபெற்ற பின்னர் பெருந்தொகையான டொலர் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது இவர் மீதான விசாரணைகளை FBI தீவிரப்படுத்தியுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தேசத்துரோகம் என வர்ணிக்கப்படுவதுடன், அமெரிக்க – சீன உறவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
________________________________________
Shocking News: Former US Air Force Pilot Arrested for Training Chinese Military
Former U.S. Air Force instructor pilot Gerald Eddie Brown Jr. has been arrested by the FBI for allegedly training Chinese military (PLA) pilots. He is accused of sharing sensitive military tactics and training through a flight school in South Africa. Brown was apprehended in Texas and faces serious charges for compromising national security in exchange for significant payments.


