“ஆளையாள் அடிக்க பிளான்!” பாகிஸ்தானை வைச்சுச் செய்ய ரெடியான இந்தியா!
உலகத்தில இப்ப என்ன நடக்குது எண்டே விளங்குதில்லை பாத்தீயளா! சுத்திவரப் பாத்தா ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டை எப்பிடி அடிக்கலாம் எண்டுதான் இப்ப பிளான் பண்ணிக்கொண்டிருக்கினம். அந்த லிஸ்டில இப்ப இந்தியாவும் அதிரடியா இறங்கிட்டுது!
விசயம் என்னெண்டா…
“பாகிஸ்தானை வைச்சுச் செய்வம்” எண்டு இந்திய ராணுவத்தோட மேற்குப் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர் இப்ப ஒரு பகீர் அறிக்கை விட்டிருக்கிறார். ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ (Operation Sindoor 2.0) எண்ட ஒரு மாபெரும் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா இப்ப முழுமையாத் தயாராகியிருக்கு.
போன வருசம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ல வெறும் நாலே நாளில பாகிஸ்தான் முழங்கால் படியிட்டு மண்டியிட்டது. “எங்களிட்ட அணுகுண்டு இருக்கு” எண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எப்ப பாத்தாலும் காட்டுற பூச்சாண்டிக்கு நாங்க இனிப் பயப்பட மாட்டம் எண்டு இந்திய ராணுவம் நெத்தியடியாச் சொல்லியிருக்கு.
💥 இந்த முறை தரை, கடல், ஆகாயம் எண்டு எதில வேணுமெண்டாலும் அடி விழலாம் எண்டதுதான் இப்போதைய உச்சக்கட்டப் பதற்றம்! உலக நாடுகள் எல்லாம் ஆளையாள் அடிக்கப் பிளான் பண்ற இந்த நேரத்தில, இந்தியாவின் இந்த முடிவு எந்த மாதிரியான விளைவுகளைக் கொண்டுவரும் எண்டு எல்லாரும் திக் திக் எண்டு பாத்துக்கொண்டிருக்கினம்.
உங்கட கருத்து என்ன? இந்தியாவின் இந்த நேரடி மிரட்டலுக்குப் பிறகு பாகிஸ்தான் பயந்துபோய் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்குமா? இல்லாட்டி திருப்பி அடிக்குமா? கமெண்டில சொல்லுங்கோ!

