கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி! 

கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி!

​விசா நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு, கொழும்பின் இதயப்பகுதியில் அமர்ந்து கொண்டு சர்வதேச அளவில் வலைவிரித்த சீன மோசடி கும்பலை கறுவாத்தோட்டம் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!

 

​சம்பவம் எங்கே?

​கொழும்பு 05, ஜாவத்தை பகுதியில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் இந்த “சைபர் க்ரைம்” தொழிற்சாலையே இயங்கி வந்துள்ளது. சாதாரணமானவர்கள் நுழைய முடியாத அளவுக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த வீட்டை, பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

​🕵️ சிக்கிய ‘டிஜிட்டல்’ ஆதாரங்கள்..

​கைது செய்யப்பட்ட 16 சீனர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், இது வெறும் விசா மீறல் அல்ல, ஒரு பாரிய சர்வதேச நிதி மோசடி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன..

💥​23 அதிநவீன மடிக்கணினிகள் (Laptop) 💻

💥​09 வாய்ஸ் டிரான்ஸ்லேட்டர்கள் (வெவ்வேறு நாட்டு மக்களை அவர்களின் மொழியிலேயே பேசி ஏமாற்றப் பயன்படுத்தப்பட்டவை!) 🗣️

💥​3,280 வெளிநாட்டு சிகரெட்டுகள் (வரியின்றி கடத்தி வரப்பட்டவை) 🚬

💥​7 ரவுட்டர்கள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் 📱

 

​💸 மோசடி ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

​இவர்கள் இலங்கையை ஒரு பாதுகாப்பான தளமாகப் பயன்படுத்திக் கொண்டு, மிரமிட் (Pyramid) திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நபர்களைத் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டியுள்ளனர். பிடிபட்ட மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களை வசீகரமாகப் பேசி வீழ்த்தியிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

​⚡ பொலிஸாரின் ‘மின்னல்’ வேட்டை..

​கறுவாத்தோட்டம் பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீவ குமார மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர், மிகத் துல்லியமான தகவலின் அடிப்படையில் இந்த ‘ரெய்டு’ நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

​⚠️ பொதுமக்களுக்கான எச்சரிக்கை!

​இலங்கையில் சமீபகாலமாக சுற்றுலா விசாக்களில் வந்து தங்கும் வெளிநாட்டினர் இது போன்ற ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. “குறைந்த முதலீடு – அதிக லாபம்” என ஆன்லைனில் வரும் ஆசைகாட்டல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin