நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு

நானாட்டான் – எருவிட்டான் வீதி புனரமைப்பு

மன்னார், நானாட்டான் பிரதேசத்தில் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் இருந்த எருவிட்டான் கிராம வீதி, நேற்று முதல் முறையாகப் புனரமைப்புப் பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ஒரு பகுதியாக, இந்த வீதி அபிவிருத்தித் திட்டம் நேற்று மாலை உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

1.5 கிலோமீட்டர் நீளமான இவ்வீதி புனரமைப்புக்கென 57.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இந்த வீதிக்கு மேலதிகமாக, மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனின் வழிகாட்டலில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இது அப்பகுதி மக்களின் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin