நல்லூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து விளக்கம்நிதியொதுக்கீடு மற்றும் ஊழியர் கொடுப்பனவு குறித்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் விளக்கமளித்துள்ளாா். அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவா் விளக்கமளித்துள்ளாா்.
வெளிவாரி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் உரிய சட்ட நடைமுறைகளின்படியே வழங்கப்படுகின்றன.
இதில் எந்தவிதமான நிதி வீண்விரயமும் செய்யப்படவில்லை என தவிசாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊழியர்களின் கொடுப்பனவை உயர்த்துவதற்கான தீர்மானம் சபையில் எடுக்கப்பட்டது. இதற்கு தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.
தற்போது அரசியல் லாபத்திற்காக அவர்கள் மாற்றிப் பேசுவதாக தவிசாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
மீள்சுழற்சி மையங்களில் கழிவுகளைத் தரம் பிரிப்பதற்காக மேலதிக ஊழியர்கள் உள்வாங்கப்பட்டதாலேயே மொத்தக் கொடுப்பனவுத் தொகை அதிகரித்துள்ளது.
தனிப்பட்ட உதவியாளர் குறித்த சர்ச்சைக்கான பதில்
சபை அமர்வுகளைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்குக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர் குறித்த நபர் (வரதராஜன் பார்த்திபன்) வெறும் பார்வையாளர் அல்ல அவர் ஒரு அலுவலகப் பணியாளர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அவர் ஜி.பி.எஸ் (GPS) கண்காணிப்பு, வாகன வழித்தட வரைபடங்களை உருவாக்குதல், கண்காணிப்பு கமரா பராமரிப்பு, தரவுத்தள முகாமைத்துவம் மற்றும் ஊடகப்பிரிவு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் பணிக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே அவருக்குரிய ஊதியம் வழங்கப்படுகின்றது என தொிவித்துள்ளாா்.
நல்லூர் பிரதேச சபையானது மக்களின் வாழ்வாதாரத்தையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வினைத்திறனுடன் செயல்பட்டு வருவதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக தகவல்கள் திரிபுபடுத்தப்படுவதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

