சுன்னாகம் காவல்நிலைய புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் கடமையேற்பு
சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் தனது பணிகளைப் பொறுப்பேற்றார்.
இன்றையதினம் காலை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர், அதனைத் தொடர்ந்து சுன்னாகம் காவல் நிலையத்திற்கு வருகை தந்தார்.
காவல் நிலையத்தில் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார் கலந்துகொண்டு, அவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தனர்.

