யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி

யாழில் 1.750 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் கைது: மருதங்கேணி காவல்துறையினா் அதிரடி

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் நடமாடுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரது உடைமைகளைச் சோதனையிட்ட போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மருதங்கேணி காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், இப்பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin