மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!

மீண்டும் நிலவுக்கு மனிதர்கள்! நாசாவின் வரலாற்றுப் பயணம்!

அரை நூற்றாண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! நாசா (NASA) தனது அதிரடித் திட்டமான ஆர்டெமிஸ் (Artemis) திட்டத்தின் மூலம், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது.

📍 இது நிலவில் தளம் அமைப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தில் முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீரரும், ஒரு கறுப்பின விண்வெளி வீரரும் நிலவைச் சென்றடைய உள்ளனர்.

வெறும் தரையிறங்குவது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டமாகவும் இந்தத் திட்டம் அமையவுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ரொக்கெட் மற்றும் ஓரியன் (Orion) விண்கலம் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளைப் பொறுத்து ஏவுதளத் தேதிகளில் மாற்றங்கள் இருக்கலாம். இது விண்வெளி ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்!

Recommended For You

About the Author: admin